மட்டக்களப்பு மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம்.

0
38

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமான நடைபெற்றுவரும் அதேவேளையில் பொதுமக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிட் தடுப்புசிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு பாரதி வீதி அருணோதயம் வித்தியாலயம்,சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்,சிசிலியா பெண்கள் உயர்பாடசாலை,கல்லடி சிவானந்தா வித்தியாலயம்,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு இலட்;சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here