மட்டக்களப்பு மாநகரசபை கூட்டங்களை சட்டரீதியாக நடத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு.

0
29

மட்டக்களப்பு மாநகரசபை கூட்டங்களை சட்டரீதியாக எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று இன்று (04) திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்விற்கு, உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் என்.ஐங்கரன் கலந்துகொண்டு செயலமர்வினை நடாத்தியிருந்தார்.

இதன்போது மாநகர சபை கூட்டங்களை எவ்வாறு சட்டரீதியாக நடாத்துவது, எவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை இச்செயலமர்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உட்பட மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here