மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
32

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றிய டயகம் சிறுமி உட்பட பலர் மரணித்துள்ளமைக்கு, மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 5ஆவது அமர்வு, மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போது, பல சிறுமிகள், ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜாவினால் கண்டன தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அது சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

– வா.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here