மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா -2021

0
808

2021 மாமாங்க ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றம் இல்லாமல் நாளை (2021.07.30) ஆரம்பமாக இருக்கிறது.

அரசாங்க சுற்று நிருபத்துக்கு அமைவாக திருவிழா நிகழ்வுகள் இடம் பெற இருக்கிறது.
இம் முறை கொடியேற்றம் மற்றும் தீர்த்தோற்சவம் இடம் பெறமாட்டாது, அத்தோடு உள் வீதி வலம் வருதலுடன் பகல் நேர பூஜை மாத்திரம் நடை பெற இருக்கிறது.


சுவாமி வெளி வீதி வலம் வருதலும் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் திருவிழா சமயங்களில் நூறு பேருக்கு மேற்படாமல் மாமாங்கேஸ்வரரை வழிபட அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் சுழற்சி முறையில் தினமும் 100 சைவ அடியார்களை பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கு மாறு ஆலய நிர்வாகத்திடம் வேண்டுகொள் விடுக்கப்படுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here