மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்?

0
25

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே அறியமுடியுமெனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசியை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 சதவீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர். அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 சத வீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றார்.

கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானம்
மேற்கொள்ளப்படும் என்றார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here