மட்டக்களப்பு மாவட்டத்தில் 19,959 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் 68பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

0
90

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் 68பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

“ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும், செங்கலடி சுகாதார பிரிவில் 15 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் ஐவரும், களுவாஞ்சிகுடி பகுதியில் நால்வரும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் மூவரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இருவருமாக இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வரை 19,959 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 19,464 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 16,063 பேருமாக, கிழக்கு மாகாணத்தில் கடந்த 05 நாட்களில் 55,757 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக,  ஏற்றப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (14) தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here