மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தலுக்கான நிலைமைகள் இல்லை.

0
28

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தலுக்கான நிலைமைகள் இல்லையெனவும் மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

சில கிராமங்களில் சில பொது அமைப்புகள் பாரிய தாக்கம் ஏற்படும் என்ற ரீதியில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கிவருவதாகவும் வீணான வதந்திகளை நம்பாமல் திணைக்களங்களின் தகவல்களைப்பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here