மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னம் பிள்ளைகளை நடுகை செய்யும் வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0
40

கிழக்கில் 5000 தென்னம் பிள்ளைகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டத்தினை, பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிலான சுபீட்சத்தின் நோக்கு விசேட வேலைத் திட்டத்தின்கீழ் ஒருஇலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகளைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னம் பிள்ளைகளை நடுகை செய்யும் வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் 2022 புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் முதல்நாளில் மாவட்ட செயலக புதிய கட்டிட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பலநோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேஜர் கே.பீ. கமகேவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சிவதர்சினி திருபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here