மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு.

0
92

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, உற்பத்தியைத் தடுக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் , களுவன்கேணி, கருவப்பங்கேணி மற்றும் குளத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்புஸ்குடா பகுதியிலுள்ள  காட்டுப் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, 5 பரல்களில் இருந்து 4 இலட்சத்து  30,000 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here