மட்டக்களப்பு மாவட்டத்தில் 157 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

0
60

கடந்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 211 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 157 நோயாளிகளும், கல்முனையில் 29 பேரும் அம்பாறையில் 15 பேரும் திருகோணமலையில் 10 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 3ஆவது அலையில், கிழக்கு மாகாணத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளும்; 230 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் ஜூலை மாத முற்பகுதியில் இருந்து தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here