மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை தொடக்கம், காலை முதல் இரவு 9 மணிவரை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தளங்களில், உற்சவங்கள் மற்றும் விழாக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் குறித்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.