மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி.

0
39

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே. ஜேகப் ஆகியோருக்கு இடையிலான நற்புறவு சந்திப்பு ஒன்று இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படுவதற்க்காக கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார, விவசாய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்பட்டதுடன் இதன் போது இராஜாங்க அமைச்சரினால் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தினை மிக விரைவில் முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் இந்த கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி யோசனைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே. ஜேகப்பினால் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே. ஜேகப் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷத டி சில்வா மற்றும் இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் எல்டோர் மெத்திவ் உள்ளிட்ட இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here