மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா!!

0
141

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நவராத்திரி பூஜை நிகழ்வுகள் இன்று (15) மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சுகாதார விதிமுறைககளப் பின்பற்றி மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

மாவட்ட கலாசார பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நவராத்திரி பூசை நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.
அத்தோடு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி. இந்திராவதி மோகன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. பஜனை வழிபாடுகளுடன் ஆரம்பமான பூசையானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் சகலகலா வள்ளி பாமாலை பாடப்பட்டு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த பூஜைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை இன நல்லுறவை வெளிக்கொணர்ந்ததோடு இனநல்லுறவை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

பூசையின் நிறைவில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் சிறார்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மூன்று குளங்களை புனரமைத்துக்கொடுக்க அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக திட்டம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் வாகரை பிரதேசத்திலுள்ள 3 குளங்களை புனரமைப்பதற்கு அரசுசார்பற்ற நிறுவனமான கொகோகோலா பவுன்டேசன் 200000 அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியை செலவுசெய்ய உள்ளமை தொடர்பான அறிமுக நிகழ்வு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த குளங்களின் புனரமைப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

குறித்த புனரமைப்பு திட்டங்கள் அமுல்படுத்தவுள்ள கால எல்லை தொடர்பாகவும் வாகரை பிரதேசத்தில் புனரமைக்கப்படவுள்ள பனிச்சங்கேனி, திக்கானை மற்றும் தாமரைக்குளம் போன்ற மூன்று குளங்களையும் அத்தோடு அக்குளங்களை அண்டிய மக்களுடைய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களையும் சிறியளவு மீன் வளர்ப்புக்கு அந்த நிதியினை பயன்படுத்துவது தொடர்பாகவும் அதனை ஆரம்பிப்பதற்கு திணைக்களங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு உதவி செய்ய வந்த நிறுவனத்திற்கு இதன்போது நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here