மதுபானம் அருந்துவோரின் தொகை 25 சதவீதத்தினால் வீழ்ச்சி.

0
36

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பிந்திய காலப்பகுதியில் மதுபானம் அருந்துவோரின் தொகை 25 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த தகவலை கலால் வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னரான காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 கோடி ரூபாவை செலவு செய்து வந்தனர்.ஆனால் தற்போது அந்த தொகை 35 கோடி ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையே, இதற்கான காரணம் என தெரிய வருகின்றது. இதைத்தவிர, சட்டவிரோத மதுபான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்ற எண்ணப்பாடு மற்றும் அதிக நேரம் அமர்ந்திருந்து மதுஅருந்தும் இடங்கள் மூடப்பட்டமை ஆகியனவும் மதுபானம் அருந்தும் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணமாக அமைகின்றன என கலால் வரித்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here