மதுபோதையில் பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ் சாரதி கைது.

0
24

மன்னாரில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ் சாரதி கடுமையான மதுபோதையில் குறித்த பஸ்ஸை செலுத்திச் சென்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (9) மாலை வீதி போக்குவரத்து பொலிஸார் குறித்த பஸ்ஸை இடைமறித்து அதன் சாரதியை கைது செய்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன், ஆண்டாங்குளம் மற்றும் வட்டக்கண்டல் ஆகிய கிராமங்கில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி இறக்கும் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் ஆடைத்தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை (9) மாலை 5.30 மணியளவில் கடமை முடிந்து பணியாளர்கள் ஆடைத்தொழிற்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பஸ் ஊடாக தமது கிராமங்கள் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன், ஆண்டாங்குளம் மற்றும் வட்டக்கண்டல் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பணியாளர்களும் குறித்த பஸ்ஸில் தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
இதன்போது குறித்த பஸ்ஸின் சாரதி மதுபோதையில் காணப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து மன்னார் பஸார் பகுதி வரை குறித்த பஸ் தள்ளாடிய நிலையிலே சென்றுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறித்த பஸ்ஸை நிறுத்தி சாரதியை பரிசோதித்தபோது குறித்த சாரதி நிறை போதையில் தள்ளாடியமை தெரிய வந்தது.

உடனடியாக பிறிதொரு பஸ்ஸை ஏற்பாடு செய்த பொலிஸார் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை அதில் ஏற்றி தமது கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பஸ்ஸை பொலிஸார் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here