பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி அளித்துள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக பல்பொருள் அங்காடிகள் ஊடாக மதுபான விற்பனைக்கு செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.