மனிதாபிமானம் மிக்க திருடன் ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

0
7

கொழும்பு,வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர், கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 03 பிள்ளைகளின் தாயாருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரமும் இப் பெண் வேலைக்கு சென்று மீண்டும் இரவு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பெண்ணை வழிமறித்த ஒரு நபர், தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி , பெண்ணை மிரட்டி தான் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு கூறியுள்ளார். 

சிறிது தூரம் சென்ற பின்னர் ஆள் நடமாட்டம் அற்ற பிரதேசம் ஒன்றில் வைத்து பெண்ணிடமிருந்த பணம் , தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை அந்நபர் பறித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது அந்த நபரிடம், தான் 03 பிள்ளைகளின் தாய் என்பதோடு , கணவனின்றி பிள்ளைகளுடன் தனியாகவே வசித்து வருவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். 

கணவன் இல்லாததால் குடும்ப பொறுப்பு முழுவதையும் தானே சுமப்பதாகவும் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரின் பின்னணியை கேட்ட அந்த திருடன் அவரிடம் பறித்த அனைத்து பொருட்களையும் அவரிடமே மீள கையளித்ததோடு , அவரை பாதுகாப்பாக பிரதான வீதி வரை அழைத்தும் வந்துள்ளார். 

திருடன் ஒருவனிடம் இந்த மனிதாபிமானம் வெளிப்பட்டுள்ளமை ஆச்சரியமளிப்பதாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here