மரணமடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

0
7

நுவரெலியா, கந்தப்பளை கொங்கோடியா கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பூப்பனை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 50 வயதுக்கு மேற்பட்ட மூவர் மரணமடைந்தனர்.

இவ்வாறு மரணமடைந்தரவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, என தெரிவித்துள்ள கந்தப்பளை பொது சுகாதார பரிசோதகர் அதிகாரி டப்ளியூ.ஜி.அமில, இந்த மரணங்கள் இயற்கை மரணங்கள் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்த மூன்று மரணங்கள் குறித்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணை அறிக்கையை குடும்பத்தாருக்கு வழங்கியுள்ளதுடன், அதில் இயற்கை மரணமென அறிவிக்கப்பட்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும்  பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இயற்கை மரணத்தை தழுவி கொண்ட மூவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் வயது முதிர்ந்த இவர்கள் சளி,சக்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனைகள்  மூலம் கண்டறியபபட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களின் மரணம் இயற்கை மரணமென மரண சான்றிதழ்  வழங்கப்பட்டுள்ள போதிலும்

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டதால் இவர்கள் இறந்ததாக இப்பிரதேசத்தில் சிலர் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர்.  இது உண்மைக்கு புறம்பான  பிரசாரமாகும் எனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ்வாறு பொய் பிரசாரங்களை செய்வதன் காரணமாக கந்தப்பளை பிரதேச மக்கள்  பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வது  தொடர்பில் அச்சம் கொள்ள நேரிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  கந்தப்பளை பிரதேசத்தில் ஒன்பதாயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்படுகின்றது நான்காயிரம் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

என தெரிவித்த பொது சுகாதார  பரிசோதகர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது  தொடர்பில் விபரங்கள் தேவையாயின் கந்தப்பளை மக்கள், தோட்ட சுகாதார அதிகாரி மற்றும் வைத்தியர்களுடன் மற்றும் பொது சுகாதார  காரியாலத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளமுடியுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் மூன்றாவது தடுப்பூசியாக தற்போது இப்பிரதேசத்தில் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் அச்சப்பட தேவையில்லையெனத் தெரிவித்த அவர், தடுப்பூசி தொடர்பில் பீதி கிளப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here