மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சிகை அலங்கார நிலையங்ககளை திறக்க அனுமதி இல்லை.

0
56

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள சிகை அலங்கார நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன், நேற்று (28) தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றின்  மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக பரவிவருவதால் சிகை அலங்கார நிலையங்களில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சுகாதார வைத்தியதிகாரியிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் என்பன அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  சிகை அலங்கார நிலையங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டுமெனவும், கை களுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

திறந்த காற்றோட்டமுள்ள இடமாக இருப்பதோடு, ஒருவருக்கு பாவிக்கப்படும் சீலை மற்றவருக்கு பாவிக்க முடியாது. அத்துடன், உபகரணங்கள் உடனுக்குடன் கிருமித் தொற்று நீக்கம் செய்ய வேண்டுமெனவும், கடைக்குள் கட்டாயம் 01 மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.

சிகை அலங்கார நிலையத்துக்குச் செல்லுபவர்கள் நேர ஒதுக்கீட்டை பெற்றுச் செல்வது இலகுவாக அமையுமென அறிவித்துள்ளார்.

மேற்குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத சிகை அலங்கார நிலையங்களின் உரிமையாளர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here