மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – சி.சந்திரகாந்தன்!!

0
34

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதினெட்டு வயது கூட நிறைவடையாத மலையக சிறுமியை வேலைக்கு அமர்த்தியது என்பது ஒரு சோகமான விடயம் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய சட்டத்தை இயற்றுகின்ற மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்படவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் அந்த சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாக தான் பார்க்கின்றேன்.

இந்த விடயமானது ஏனைய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது, தற்போது சமூக மட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுற்சி நிச்சயமாக சமூக மட்டத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here