மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி .

0
11

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு, ஹோமாகம, பிலியந்தல, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய கல்வி வலயங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மற்றும் ஏற்கெனவே ஒரு தடவை தோற்றிய 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை மறுதினம்(15) முன்னெடுக்கப்படவுள்ளதென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இன்று (13) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு மத்தியநிலையங்களிலும் அதிக எண்ணிக்கையைக் கொண்ட மாணவர்களுக்கு அவர்களது பாடசாலைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

இது தொடர்பான அறிவித்தல் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அந்தந்த பாடசாலை அதிபர்களுடன் தொடர்புகொண்டு இதனை வினவலாம்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here