முன்னாள் இராணுவ வீரர்களின் சம்பளம், ஆயுதப்படைகளில் பணியாற்றும் போது அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் சரிசெய்யப்பட இருக்கிறது.

0
34

 பொது சேவை அல்லது அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர்கள், செயலில் உள்ள இராணுவ சேவையில் இருக்கும்போது அவர்கள் பெற்ற சம்பளத்தை பெற உரிமை உண்டு, இதற்காக பொது சேவை ஸ்தாபனக் குறியீட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் படையினர் பொதுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்போது அவர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க குறிப்பிட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் ஸ்தாபனக் குறியீட்டில் திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக குறியீட்டின் இரண்டாம் அத்தியாயத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள், சுருக்கமாக சுட்டிக்காட்ட்டப்பட்டிருந்தாலும் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் சம்பளத்தை எந்த விதிகளின் கீழ் தயாரிக்க முடியும் என்று அதில் குறிப்பிடவில்லை.

திருத்தப்பட்ட ஸ்தாபனக் குறியீட்டின் கீழ், பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களின் சம்பளம், ஆயுதப்படைகளில் பணியாற்றும் போது அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) மூத்த அதிகாரிகள் வகித்த உயர்மட்ட பதவிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, ஸ்தாபனக் குறியீட்டைத் திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் படையினரை நியமிப்பதன் மூலம், இலங்கை சிவில் நிர்வாக சேவை இராணுவ மயமாக்கப்படுவதாக சிவில் சமூக அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், அரசாங்கம் அத்தகைய நியமனங்களைத் தொடர்கிறது.

கடந்த வாரம் முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, அமைச்சர் விமல் வீரவன்சவின் கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு பதவிகள் குழுவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here