மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

0
28

மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சந்தையில் போதுமான அரிசி இருப்பு இருப்பதை உறுதி செய்ய இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் நாடு அரிசி மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் GR 11 Short Grain Rice அரிசியை கொள்வனவு செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here