மூவரும் அமைச்சுப் பதவிகளை துறந்து வெளியில் வரவேண்டும் .

0
4

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் யுகதனவி மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் உண்மையாக பேசுபவர்களாக இருந்தால், அவர்கள் மூவரும் அமைச்சுப் பதவிகளை துறந்து வெளியில் வரவேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

  இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய அமைச்சரவையில் எவரும் செயற்படவில்லை என்றால், அவர்களின் பதவிகளை ஜனாதிபதி பறிக்க வேண்டும் என்றார்.  

எவ்வாறாயினும் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யப்போவதில்லை. அதேபோல அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் எவரும் பதவிகளில் இருந்து விலகப்போவதுமில்லை என்றார்.   மேலும், வாசு, விமல்,கம்மன்பில ஆகியோர் யுகதனவி மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் உண்மையில் பேசுபவர்களாக இருந்தால், அமைச்சுப் பதவிகளை துறந்து அவர்கள் வர வேண்டும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here