மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் இரா. சாணக்கியன்.

0
42

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சாணக்கியன், இதுபோன்ற கொலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனி இடம்பெற அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.

மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக கடந்த 21 ஆம் திகதி அவரது மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தம் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரது வீட்டிற்கு இன்று சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், தனது அனுதாபங்களை வெளியிட்டதுடன் சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here