400 மில்லிலீற்றருக்கு குறைவான பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து வகை உணவு பொதிசெய்யும் லன்ச்ஷீட் மற்றும் செயற்கை தரைவிரிப்பு உள்ளிட்ட மேலும் பல பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் உற்பத்தி தடைப் பட்டியலில் உள்ளடக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு தடவை பயன்படுத்தும் உறிஞ்சு குழாய், உணவு பொதிசெய்யும் பெட்டிகள், பிளாஸ்டிக் கரண்டி, முள்ளுக்கரண்டி, யோகட் கரண்டி, பிளாஸ்டிக் இடியாப்பத் தட்டு, ப்ளாஸ்டிக் பூமாலை, பத்திகள் என்பவற்றை இந்த தடை பட்டியலில் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனினால் தயாரிக்கப்பட்ட 10 அங்குலம், 4 அங்குலம் அளவுகளுக்கு குறைவான அகலத்தைக் கொண்ட பைகள் உள்ளிட்டவை இந்த தடைப்பட்டியலுக்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக