மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோபாம் தடுதடுப்பூசியின் முதலாவது டோஸ் நாளை வழங்கப்படும்.

0
27

மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோபாம் தடுதடுப்பூசியின் முதலாவது டோஸ், விகாரமகாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் நாளை வழங்கப்படும் என தேசிய கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

நாளை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெறும் என்றும் அச்செயலணி தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் நிரந்தரமாக வதிவதற்கான அத்தாட்சிகளாக தேசிய அடையாள அட்டையுடன் மின்சார அல்லது தொலைபேசி கட்டணப் பட்டியல் அல்லது வாக்காளர் பட்டியலின் நகல் அல்லது கிராம அலுவலரால் வழங்கப்பட்ட வதிவிட அத்தாட்சி ஆகியவற்றை சமர்ப்பித்து தடுப்பூசியைப் பெறலாம் என்றும் அச்செயலணி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here