மொடர்னா தடுப்பூசியில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை.

0
42

மொடர்னா கொரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அறிக்கைகள் பொய்யானவை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லாததால், மொடர்னாவைப் பெறுவதற்கு பயப்பட அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடவ,

மொடர்னா தடுப்பூசியில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த கூற்றுக்கள் தொடர்பாக, மொடர்னா தடுப்பூசியில் லூசிஃபெரேஸ் எனப்படும் ஊக்கிகள் இல்லை என்பதைக் கண்டுபிடித்ததாக என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தடுப்பூசிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மக்கள் ஏமாற வேண்டாம், சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களை நம்ப வேண்டும் என்று படுவந்துடவ கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here