மொழிகள் என்னும் விழிகள்

0
25

மொழிகள் எல்லாம் உள்ளத்தின் எண்ணத்தை

வெளிபடுத்த வல்ல உள்ள வழிகள் – இந்த

மொழிகள் என்பது விழிகள் போன்றது – பன்

மொழிகள் என்பது பல் வழிகள் போன்றது

மொழிகளே இனத்தின் பண்பாடு கலாசாரம் என அனைத்தும்

மொழிகள் உலகில் ஏழாயிரத்து தொண்ணூற்றேழு இருக்கின்றன

சீன மொழி 130 கோடி மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் பெருமை மிக்கது

ஸ்பானிஷ் மொழி 44.2 கோடி மக்கள் 31 நாடுகளில் பேசப்படுகிறது

ஆங்கில மொழி 37.8 கோடி மக்களால் அநேக நாடுகளில் பேசப்படுகிறது

இந்தி மொழி 26 கோடி மக்களால் நான்கு நாடுகளில் பேசப்படுகிறது

தமிழ் முதன்மை மொழியாக 10 கோடி மக்களால் 7 நாடுகளில் பேசப்படுகிறது

இந்தி மொழி 48 விதமாக வடிவங்களில் பேசப்படுகிறது

தமிழ்மொழி தமிழ், கைகடி, யருகுலா,யருகாலா, மற்றும் பிற என 4 வடிவங்கள்

மொழிகள் 780 க்கும் அதிகமாக இந்தியாவில் மட்டும் செழித்துள்ளன

மொழிகள் 220-க்கும் அதிகமாக கடந்த 50 ஆண்டுகளில் அழிந்துள்ளன

இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 19,569

மொழி அழிவதென்பது, அந்த ஒட்டுமொத்த இனத்தின் அழிவாகும்

மொழிகள் கட்சி விஷயத்தில் என்றும் வேண்டாம் பிணக்கு

மொழிகள் ஆட்சி விஷயத்தில் என்றும் வேண்டும் கணக்கு

மொழிகள் கற்பதும் அவரவர் விருப்புதான்

மொழிகள் ஏற்பதும் அவரவர் பொறுப்புதான்

பல மாநிலங்கள் அலையும் பணியுள்ளார்க்கு

பல மொழிகள் தேவையே துணிவுள்ளார்க்கு  

மொழிகள் கற்று உயர்வது தனித் திறமைக்கு வளர்ச்சி

மொழிவழிப் பணிகளை உயர்த்திட, வேண்டாம் தளர்ச்சி

மொழி பெயர்ப்பு என்றும் தேவையே உலகுக்கும்

மொழி வியப்பு என்றும் புரியா தடங்கலை விலக்கும்

பல மொழிகள் சொல்வது அவசியம் மக்களுக்கு

பல நாடுகள் செல்வதும் அவசியம் மக்களுக்கு

சென்றிடுவோம் எட்டுத்திக்கும் பன்மொழி நேசி

வென்றிடுவோம் பாட்டுதிக்கும் இன்மொழி பேசி

கலைச் செல்வங்களை எங்கும் பகிர்வோம் சென்று

நிலைச் செல்வங்களாக தங்கும் நுகர்வோம் நன்று

மொழி புரியாது தலைகுனிந்து விலகிச் செல்பவர்கள் நாம் பின்னேற்றம்

பொழில் பாரெங்கும் வணிகம் பழகிச் செல்பவர்கள் தாம் முன்னேற்றம்

என்றும் பன்மொழி வித்தகம் தோற்காது; பார்; பாரே எல்லை

இன்றும் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலிப்பதே இல்லை

நம் மொழி நமக்கு சிறப்பு அது பெரிய உவப்பு

பன் மொழி நாம் கற்றால் அது அரிய உவப்பு

பன் மொழி ஏற்பதும் கற்பதும் அவரவர்கள் விருப்பு

என் மொழி மட்டும் கற்பது என்று இருப்பது வெறுப்பு

மொழியினால் விரோதங்கள் காட்டுவது ஏன்

விழியினால் குரோதங்கள் காட்டுவதும் ஏன்

இன ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நம்

மொழிகளை உயிருடன் வைத்திருப்பது அவசியம்

பாருக்குள் முதலிடம் தமிழுக்கே என்று இன்று உலகம் உணர்கிறது

பலமொழிப் புலமை தமிழருக்கே என்றும் உலகம் அறியவேண்டும்

உலகளாவிய பல்வேறு மொழிகளைக் கற்று மாட்சி செய்தவன் தமிழனே

உலகளாவிய பல்வேறு அரசாங்கங்களை ஆட்சி செய்தவன் தமிழனே

நம் மொழி போற்றி, பிறர் மொழி மதித்து வாழ்ந்திட பழக வேண்டும்

தம் மொழி ஏற்றி, பிறர் மொழி அனுமதித்து வாழ்ந்திட பழக வேண்டும்

வாய்மொழிகள் கற்பது என்பது ஒருவருடைய கலையாய உடைமை

தாய்மொழியைக் காப்பது என்பது ஒருவருடைய தலையாய கடமை.

நன்றி நீர்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here