மோட்டார் போக்குவரத்து துறையின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவைகளை ஆரம்பமாகின .

0
28

மோட்டார் போக்குவரத்து துறையின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களில் பொதுச் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி அலுவலகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அலககோன் தெரிவித்தார்.

எனினும், மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதால், நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மேல் மாகாண மக்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்குகின்றன என்று ஆணையர் தெரிவித்தார்.

சேவையைப் பெற விரும்புவோர் 011 2 677 877 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து திகதி மற்றும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here