யாழ்நகரில் கலாசார சீரழிவு, 2 பெண்கள் 3 இளைஞர்கள் கைது .

0
50

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள் 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப- பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர்  நீதிமன்றின் அனுமதி பெற்று நேற்று (25) முன்னெடுத்த முற்றுகையின் போதே  இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அது தொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

“விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்தனர். விடுதி உரிமையாளரும் மாறுபட்ட தகவல்களை வழங்கினார். அதனால் அவர்கள் 6 பேரையும் கைதுசெய்துள்ளோம்.

“குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21 , 24 வயது இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர். இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச்  சேர்ந்தவர். ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here