ராஜபக்ச குடும்பத்தை அசைக்க எவராலும் முடியாது.

0
35

ஸ்ரீலங்காவில் ஆளும் ராஜபக்ச குடும்பத்தினரிடையே பிளவை ஏற்படுத்த பலரும் முயற்சித்து வந்தாலும் ராஜபக்ச குடும்பத்தை அசைக்க எவராலும் முடியாதென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை திசைதிருப்ப பஷில் ராஜபக்ஷவே முயற்சிகளை எடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க பெர்ணான்டோ, ராஜபக்ச குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்த பலரும் முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

நல்லாட்சி செய்த செயற்பாடுகள் காரணமாக மக்கள் மிகுந்த நெருக்கடியை சந்தித்தனர். எமது ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக பல நாடுகளிடமும் மண்டியிடாமல் செயற்பட்டார். ஜே.ஆர். காலத்தில் இந்தியாவினால் பருப்பு வீசப்பட்டது. இந்தியாவின் சில தலைவர்கள் எமக்கு உதவிசெய்தார்கள்.

ஆனாலும் எமது காலத்தில் இந்தியாவின் முழு உதவியை பெறவும் பஸில் ராஜபக்ஷவே சென்றார். மிகப்பெரிய போர்வெற்றியின் திரைமறைவில் இருந்து அவர் செயற்பட்டார். கொழும்பு உயர்வர்க்கத்தினர் பாவித்த கொங்கிரீட் வீதிகள், சமுர்த்தி திட்டம், பாடசாலை விருத்திகள், வீதி அபிவிருத்தி, பாலங்கள், வேலைத்திட்டங்கள் என பஷில் ராஜபக்ஷவே தொடங்கிவைத்தார். ச

கோதர கட்சித்தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகள்கூட அவரது வருகையின் பின்னர் தணிந்துவிடும். அமைச்சரவைக்குள் இருக்கின்ற சில பிரச்சினைகள்கூட தீர்ந்துவிடும். அடுத்த தேர்தல்களில் தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கும் பஸில் ராஜபக்ஷவே அவசியம். மொட்டுக்கட்சியை கிராமங்களிலிருக்கின்ற கீழ்மட்டவர்களின் ஆதரவும்கூட பஸில் ராஜபக்ஷவே திரட்டினார்.

எமக்கும், பலருக்கும் உள்ள பிரச்சினைகள் இருந்தால் அதனை நாடாளுமன்றத்திற்குள் வைத்து பஸில் ராஜபக்ஷவிடம் கேட்டு தீர்வுகாணலாம். இன்று ராஜபக்ஷவின் குடும்பத்திற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இல்லை. இது மிகவும் பலமான ராஜபக்ஷ குடும்பமாகும். வரலாற்றில் பலரது அரசியல் குடும்பங்கள் இன்று அரசியலில் இல்லை. இந்த நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ராஜபக்ஷக்களின் குடும்ப ஒன்றுமையும் பலமாகும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here