ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

0
23

2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட  விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு பணியாற்றிய 10 பேரும் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 5 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here