வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர், இணையத்தில் இவரின் எந்த செய்தி வெளியானாலும் பெரியளவில் பேசப்படும்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேலும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த வனிதா, நடுவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டார்.
இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இருவரும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புகைப்படம் அவர் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் ப்ரோமோஷனுக்காக வெளியாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.