வரலாற்றில் முதல் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனானது.

0
5

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் வரலாற்றில் முதல் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனானது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் மகத்தான வரவேற்பு உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கப்பட்டது .

கிளிநொச்சி மாவட்ட அணி சார்பாக உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர் பங்கு பற்றியிருந்தார்கள்.

குறித்த நிகழ்வில் மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் சிவநேசன் சிவநகர் அ.த.க பாடசாலையின் முன்னாள் முதல்வர் ஐ.இராசரத்தினம் பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா மற்றும் வீராங்கனைகளின் பெற்றோர்கள் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here