வருடத்திற்கு ஒரு சிகரெட்டின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கும், விலை சூத்திரம் அறிவிப்பு .

0
19

சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 முதல் 2026 வரை அமுல் படுத்த உத்தேசம் என தெரிவித்துள்ள அவர், இதனூடாக வருடத்திற்கு ஒரு சிகரெட்டின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (8)இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விலை சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகரெட்டிற்கான வரிகளை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் குறித்த திட்டம் சேர்க்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here