வறுமையை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் திட்டத்தினூடாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

0
64

கொரோனா நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மண்முணைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கிராம மக்களுக்கு ஸயான் பௌன்டேசன் மற்றும் ஒல்லிக்குளம் ஜனாஸா நலன்புரிச்சங்கம் அகியவற்றினால் மூன்றாம் கட்ட உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

ஸயான் பௌன்டேசன் மற்றும் ஒல்லிக்குளம் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தின் தலைவர் டொக்டர் எம்.ஆர்.றுஸ்கான் தலைமையில் சமாதானக்கிராமம் ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயலில் இந்நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்கு வரத்துப்பிரிவின் பொறுப்பதிகாரி விராத் தென்னகோன் சமாதானக்கிராமம் ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.எம்.பௌஸான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஒல்லிக்குளம் கீச்சாம்பள்ளம் மாவிலங்குதுறை தாழங்குடா மற்றும் மதுராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கே தனவந்தர்களின் நிதியுதவி மூலமாக பெறப்பட்ட இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here