வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் வாழைச்சேனையில் அதிரடியாக கைது.

0
25

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கறுவாக்கேணி வீதியில் வைத்து 38 வயதுடைய பிரபல போதை மாத்திரை வியாபாரியும் 27 வயதுடைய இளைஞரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வலி நிவாரண மாத்திரைகளை போதை நோக்குடன் பாவிப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை குற்றத்தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1,500 போதை மாத்திரைகள் அடங்கிய 50 போதை மாத்திரை பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த போதை மாத்திரை வியாபாரி மட்டக்களப்பிலிருந்து போதை மாத்திரைகளைக் கொண்டு வந்து ஓட்டமாவடி, மீராவோடை, செம்மண்ணோடை, மாஞ்சோலை, பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளமை தெரிய வருகின்றது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போதையொழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here