வளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 39 இலட்சம் ரூபாய் பணம் பொலிஸ் அதிகாரிகளால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

0
17

கொட்டாவ, பன்னிபிட்டிய, கிரிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் வளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 39 இலட்சம் ரூபாய் பணம் விசேட பொலிஸ் அதிகாரிகளால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளானர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நேற்று (18) தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெற்கு கடல்பகுதி ஊடாக இலங்கைக்குக் கடத்தப்பட்ட 298 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டிருந்தது.

அத்துடன், தற்போது டுபாயில் தங்கியிருக்கலாம் என நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரான, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன என்பவரால் குறித்த
போதைப்பொருள் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அத்துடன், அவரது நெருங்கிய உதவியாளரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவருக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
கொண்டிருந்தனர்.

அதனையடுத்து, ரன்மல்லி தொடர்பிலும் அவரது நடவடிக்கை பற்றியும் பொலிஸார் கண்காணித்த நிலையில், ரன்மல்லியின் மனைவியின் சகோதரர், நேற்று முன்தினம்
(17) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்காலிகமாக தங்கியிருந்த பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீட்டின் வளவில் உள்நாட்டு போதைப்பொருள் கொடுக்கல் – வாங்கல் நடவடிக்கைகளுக்கு
கைமாற்றுவதற்காக குறித்த பணம் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here