வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சந்தையில் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்தம் வாகன விலை அதிகரிப்பு .

0
89

நாட்டில் வாகனங்களின் விலை அதிகரிப்பு நாளாந்த அடிப்படையில் ஏற்பட தொடங்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் மற்றும் சந்தையில் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

நாளாந்த விலை உயர்வை அறிந்தவர்கள் விலை மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் வாகனங்களை வாங்க ஆசைப்படுவதால் விலைகளின் அதிகரிப்பு துரிதப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த விலை அதிகரிப்பு குறிப்பாக பிரபலமான வாகனங்களை பாதித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது 75 வீதமான கார் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைமை காரணமாக ஏராளமான வாகன ஓட்டிகள் வேலை இழந்துவிட்டதாகவும், 90 வீதமான மோட்டார் வணிக நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வரை வங்கிகளிடமிருந்து சிறிது நிவாரணம் வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here