வாகரை – காயங்கேணி கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் .

0
36

வாகரை – காயங்கேணி கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.

இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில்,  இன்று (17) மதியம் இருவரும் சென்ற இயந்திரப் படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீனவர்கள் மீட்டனர்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை வாகரை பொலிஸாரின் உதவியுடன் கல்குடா சுழியோடிகள் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடலில் காணாமல் போன தந்தையையும், மகனையும் கல்குடா சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த இருவரதும் உடல்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here