வாழைச்சேனையிலிருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகை காணவில்லை.

0
17

வாழைச்சேனையிலிருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகிலிருந்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என படகின் உரிமையாளர் எம்.எஸ். அன்வர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜெயபெரமுன தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகு தொடர்பில் இதுவரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த படகில் நால்வர் சென்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைக்கும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய தெலைபேசி இலக்கமான 065 -225 709 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here