விசேட செயலமர்வு ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

0
31

சர்ச்சைக்குரிய ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் தொடர்பில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுப்படுத்தும் வகையில், விசேட செயலமர்வு ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்களை ஆசிரிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்களது அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, இச்சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருவதோடு, ஆளுங்கட்சியினர் இச்சட்டமூலத்தில் உள்ள விடயங்களை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இச்சட்டமூலம் தொடர்பில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுப்படுத்தும் செயலமர்வு ஒன்றை அடுத்த மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி தொடர்பான நிபுணர்கள் பலரும் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் அடுத்த மாதம் 06ஆம் திகதி நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here