விஜய்யின் பிறந்த நாளன்று ‘தளபதி 66’ படம் வெளியாகுமா ? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் .

0
83

நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று ‘தளபதி 66’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 66’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம், ஆனால் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக விஜய் தனது ரசிகர்களிடம் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டு தளபதி விஜய், ஜூன் 22 ஆம் திகதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், தளபதியின் ரசிகர்கள் ஒன்லைன் மற்றும் ஒப்லைன் வாயிலாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட தயாராக உள்ளனர். ​​இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, ‘தளபதி 66’ படம் தொடர்பான அறிவிப்பு அவர் பிறந்த நாளன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகவும் தில் ராஜு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் இதில் அபர்ணா தாஸ், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்க உள்ளது.. அனிருத் இசையமைக்கிறார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here