வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலருக்கு 26ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு .

0
45

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மெய்ப்பாதுகாவலரின் விளக்கமறியல் உத்தரவை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை நீடித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் 21ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மகாலிங்கம் பாலசுந்தரம் (வயது 34) என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த நபரை கொரோனா காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாமை தொடர்பில் நீதவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்தே, விளக்கமறியல் உத்தரவு 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here