வெளிநாடுகளில் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0
78

வெளிநாடுகளில் தொழில்புரியும் 142  இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்களில் 4,800 பேர் வரை கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 4, 600 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இவர்களில் இதுவரை 142 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்கள் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்களாகும். அதனால் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here