வைரஸ் தொற்றைக் கண்டறியும் 5 இலட்சம் பரிசோதனை உபகரணங்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

0
33

கொவிட்-19 பரவலுக்கு எதிராக இலங்கையின் செயற்பாடுகளுக்கு உதவும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஓர் அங்கமாக மிக விரைவாக வைரஸ் தொற்றைக் கண்டறியும் 5 இலட்சம் பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

300 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த உபகரணங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி கிளையான அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் ஊமாக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக இந்த பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

‘ வைரஸினை மிக விரைவாகக் கண்டறிவதை சாத்தியமாக்குவதன் மூலம் அமெரிக்காவால் வழங்கப்பட்ட இபபரிசோதனைகள் இலங்கையில் உயிர்களைப் காப்பதுடன் பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க உதவும் ‘ என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் செயற்பணி பணிப்பாளர் ரேட் ஈஷ்லிமேன் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை இலங்கை அரசாங்கத்தின் பெருந்தொற்றுக்கான பதிலளிப்புக்கு அமெரிக்கா வழங்கிய முந்தைய உதவிகளின் அடிப்படையில் அமைவதுடன் எமது உறுதியான, நீண்டகால பங்காண்மையையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here