“ஹிஷலினி-189” எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது

0
15

வீட்டுப் பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்.

இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும் வகையிலேயே அந்த யோசனைகள் உள்ளன என, அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதை 18ஆக ஆக்குதல்
– 85,000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்
– வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி / ஊழியர் சேமலாப நிதியத்தை உருவாக்குதல்
– ஹிஷலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தை அறிமுகப்படுத்தல்

உள்ளிட்ட பரிந்துரைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here