ஹிஷாலினிக்கு நீதி கோரி நாட்டின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

0
21

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி நாட்டின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இன்றைய தினம் ஹட்டன், முல்லைத்தீவு மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணித்திற்கு நியாயம் கிடைக்க பெற வேண்டும் எனவும் மரணத்துடன் தொடர்புடையவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here