1.456 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் இலங்கை வருகிறது.

0
21

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் தனிப்பட்ட முறையில் முன்வைத்த கோரிக்கையின் பேரில், ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளின் அடுத்த தொகுதி, எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஜூலை 31 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை, ஜனாதிபதியிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும்போதே, ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கான அஸ்ட்ரா செனிகா இரண்டாவது கட்டமாக வழங்குவதற்கான தேவைப்பாடுகளுக்காக, ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்து, ஜப்பான் பிரதமரின் தலையீட்டின் பேரில், இந்த 1.456 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாக, தூதுவர் அக்கிரா சுகியாமா இதன் போது தெரிவித்தார்.

இதன் முதல் தொகுதியான 7,28,460 தடுப்பூசிகள், ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here